(FASTNEWS| COLOMBO) – இனங்களுக்கு இடையே முறுகலை ஏற்படுத்தும் வகையில், ‘எமக்கும் சந்தர்ப்பம் வரும். கடவுள் எம்மைப் பாத்துக் கொள்வார்’ என தமிழ் மொழியில் முகநூலில் பதிவொன்றினை பதிவிட்ட இளைஞர் ஒருவர் இறக்குவானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறக்குவானை- ஒரேன்ஜ்பீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இந்த பதிவு தொடர்பில் நபர் ஒருவர் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கிய தகவலுக்கமையவே, இவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.