மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் தேசிய பிக்கு முன்னணி, மத தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் ஒன்றிணைந்து இனவாதத்திற்கு எதிரான சத்தியாக்கிரகம் ஒன்றினை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர்.
குறித்த சத்தியாக்கிரகம் நாளை(09) மாலை 3.00 மணிக்கு கொழும்பு, விஹாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் இனவாதத்திற்கு எதிராக தமது எதிர்ப்பினை தெரிவிக்கும் அனைவரையும் குறித்த சத்தியாக்கிரகத்தில் பங்கேற்குமாறும் மக்கள் விடுதலை முன்னணி அழைத்துள்ளது.
#rishma