இனிப்புக் கலந்த குளிர்பானங்களுக்கு, ஏலவே வர்ணக் குறியீட்டு முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இனிப்புப் பண்டங்களைத் தயாரிப்பதற்கும், வர்ணக் குறியீட்டுத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அனைத்து இனிப்புப் பண்டங்களுக்கும், எதிர்காலத்தில் வர்ணக் குறியீடுகள் வழங்கப்படும். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், மிக விரைவில் வௌியிடப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.