இனியும் இழக்க எதுவுமில்லை – நம்பிக்கையினை இழந்தார் மேத்யூஸ்

இங்கிலாந்துக்கு எதிராக மீதமுள்ள ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.

முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் படுதோல்வியடைந்த இலங்கை அணி, 2வது டெஸ்டிலும் தோற்றது. இதனால் டெஸ்ட் தொடரை 0-2 என பறி கொடுத்தது.

இந்த தோல்வி குறித்து இலங்கை அணியின் தலைவர் மேத்யூஸ் கூறுகையில், முதல் டெஸ்ட் போட்டியில் மோசமாக தோற்றோம். 2வது டெஸ்டில் முதல் இன்னிங்சிலும் 101 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தோம்.

ஆனால் 2வது இன்னிங்சில் மீண்டு வந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடினோம். இது துடுப்பாட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.

ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்துவிட்டோம். மற்றபடி இழப்பதற்கு ஒன்றுமில்லை. மீதமுள்ள ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி யூன் 9ம் திகதி தொடங்குகிறது.