இன்னாள் ஜனாதிபதியிடமிருந்து சங்காவுக்கொரு கோரிக்கை

ஐக்கிய இராஜ்ஜியத்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குமார் சங்கக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று குமார் சங்கக்கார பங்கேற்ற இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன் நிறைவடைந்தது.

இலங்கை சார்பாக தனது இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிய நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்ததையடுத்தே, ஜனாதிபதி உரையாற்றுகையில்;

“இச்சந்தர்ப்பத்தில் குமார் சங்கக்காரவுக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை வழங்க விரும்புகிறோம்.. எனினும் அவர் அதனை ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை..” எனக் குறிப்பிட்டார்.

எனினும் இதனையடுத்து உரையாற்றிய குமார் சங்கக்கார அது தொடர்பில் எந்தவொரு பதிலையும் கூறவில்லை…

(riz)