இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான புதிய நபர் ஒருவரை வெகு விரைவில் தெரிவு செய்யவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இன்று பதுளை, கிராந்துரு கோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மத்திய வங்கியின் ஆளுநராக இருக்கும் அர்ஜூன் மகேந்திரனின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைய இருப்பதை முன்னிட்டே மேற்படி ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும், இன்னும் சில மணித்தியாலங்கில் அவர் இது தொடர்பான முடிவை எடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த விபரம் தொடர்பான பதிவினையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைத்தளத்திலும் பதிவிட்டள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
