வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் இன்புளுவென்சா தொற்றுக்குள்ளான சுமார் 500 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதாரப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அண்மைக்காலமாக பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் பொது சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் முதியோரே இன்புளுவென்சா தொற்றினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.