இன்புளுவென்சா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் தட்டுப்பாடுகள் இல்லை – சுகாதார அமைச்சு..

இன்புளுவென்சா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு வழங்க போதியளவு மருந்துகள் இருப்பதாகவும் குறித்த மருந்துகளில் தட்டுப்பாடுகள் எதுவும் இல்லை எனவும் மருத்துவ அளிப்புகள் பிரிவு அறிவித்துள்ளது.

அதன் நிர்வாகக் குழுவின் தலைவர் டாக்டர்.லால் பனாபிடிய கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் இன்புளுவென்சா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. குறித்த வைரஸ் இனால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு வழங்கும் மருந்தானது, சாதாரண நோயாளி ஒருவருக்கு தேவைப்படும் மருந்தின் அளவினை விட அதிகமாகும்.

இதற்கென அவசர நிலைமைகளில் உபயோகிக்க வைத்தியசாலைகளுக்கு மருந்து வகைகளை தொகையாக வழகியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

தட்டுப்பாடுகள் வரும் பட்சத்தில் குறித்த மருந்து வகைகளை உள்நாட்டிலிருந்து கொள்வனவு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் மருத்துவ அளிப்புகள் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

(rizmira)