இன்போசிஸ் நிறுவன ஸ்தாபகர் நாராயண மூர்த்தி திரு­ம­ண­மான மக­ளுக்­கு எழுதிய நெகிழ்ச்சி கடிதம்

இந்­தி­யாவின் பிரபல தொழிலதிபரான இன்போசிஸ் நிறுவன ஸ்தாபகர் நாராயண மூர்த்தி,  தன்­னு­டைய மக­ளுக்கு எழு­திய உருக்­க­மான கடிதம், இணை­யத்தில் வைர­லாகியுள்­ளது.

தன்­னு­டைய மூத்த மகள் அக்‌­ஷதா பிறந்த பின்னர் தான் எவ்­வா­றெல்லாம் மாறினேன் என்­பது உட்­பட பல்­வேறு நிகழ்­வுகள் குறித்து நெஞ்சை நெகிழச் செய்யும் வித­மாக அவர் எழு­திய அந்த கடிதத்தின் தமிழாக்கம்.

அக்‌­ஷதா, ஒரு அப்­பா­வாக ஆனது நான் நினைத்­தி­ராத அளவு என்னை மாற்­றி­விட்­டது.

நான் மீண்டும் பழைய ஆளாக மாற முடிந்­ததே இல்லை. உன்­னு­டைய வரவு கற்­பனை செய்­து­கூட பார்க்­காத அள­வுக்கு மகிழ்ச்­சி­யையும், ஒரு பெரிய பொறுப்­பையும் எனக்கு தந்­தது. இப்­போது நான் வெறும் மகனோ, கண­வனோ, வளர்ந்து வரும் நிறு­வ­னத்தின் ஊழி­யரோ மட்டும் இல்லை.

நான் இப்­போது ஒரு மகளின் வாழ்க்­கையில் ஒவ்­வொரு கட்­டத்­திலும் அவளின் எதிர்­பார்ப்­புக்கு ஏற்ப மாற வேண்­டிய தந்தை.உன்­னு­டைய பிறப்பு எல்லா வகை­யிலும் என் வாழ்வில் ஒரு அடை­யா­ள­மாக மாறி விட்­டது.

வேலை­யி­டத்தில் மிகவும் சிந்­தித்தும், அள­விட்டும் மட்­டுமே நான் பேச்­சு­வார்த்தை நிகழ்த்­து­கிறேன். வெளி உல­கோடு நான் செய்யும் பரி­மாற்­றங்கள் அனைத்­துமே மிகவும் கண்­ணி­ய­மா­கவும், முதிர்ந்த சிந்­தனை உடை­ய­தா­கவும் மாறி விட்­டன.

ஒவ்­வொரு மனி­த­ரையும் மிகவும் மரி­யா­தை­யா­கவும் கவ­ன­மா­கவும் அணுக வேண்­டிய அவ­சி­யத்தைப் புரிந்து கொண்டேன். ஏனெனில், என்­றேனும் ஒரு நாள் நீ வளர்ந்து வெளி உலகை புரிந்து கொள்­ளும்­போது,  உன் தந்தை தவ­றி­ழைத்து விட்டார் என நீ எண்ணக் கூடாது.

இப்­போது நீங்கள் இருக்கும் நிலைக்கு உங்­களைக் கொண்டு வந்­த­தற்கு நான் உன் தாய்க்கு நன்றி உள்­ளவன் ஆவேன். அவள் உங்­க­ளுக்கு வார்த்­தை­களைக் காட்­டிலும் செய­லில்தான் அனைத்­தையும் கற்றுக் கொடுத்தாள்.

உனக்கும் ரோஹ­னுக்கும் அவள் எளிமை, சிக்­கனம் ஆகி­ய­வற்றின் முக்­கி­யத்­து­வத்தைக் கற்று கொடுத்­தி­ருக்­கிறாள்’ என்­ப­துதான். ஒரு முறை பெங்­க­ளூரில் இருக்கும் போது உன் பள்ளி விழா­விற்கு நீ ஒரு சிறப்­பான உடையை அணிய வேண்டியிருந்­தது. அப்­போது அடிப்­ப­டை­யான விஷ­யங்­களைத் தவிர்த்து, வேறுறெதும் வாங்க எங்­க­ளிடம் வசதி கிடை­யாது.

உன் அம்மா உன்­னிடம்,  ‘அந்த உடையை வாங்க முடி­யாது, அதனால் நீ அந்த போட்­டியில் பங்­கேற்க வேண்டாம்’ எனக் கூறினாள். வெகு நாட்­க­ளுக்குப் பின்னர், நாங்கள் ஏன் அப்­படி உன்­னிடம் நடந்­து­கொண்டோம் என புரி­ய­வில்லை எனக் கூறினாள்.

அன்று ஒரு குழந்­தை­யாக பாட­சா­லையில் அந்த விழாவில் கலந்து கொள்­ளாமல் நீ வருத்­தப்­பட்­டது தெரியும். ஆனால், அது உனக்கு வாழ்க்­கையில் சிக்­க­னத்தைப் பற்­றிய மிகப் பெரிய பாட­மாக அமைந்­தது.

ஆனால், வாழ்க்கை இப்­போது மாறி விட்­டது. நம்­மிடம் போது­மான அளவு பணம் உள்­ளது. ஆனால், உனக்குத் தெரியும். நம் வாழ்க்­கை­முறை எளி­மை­யா­னது என்று. ஒரு முறை நமக்கு சிறிது பணம் வந்­ததும், உங்­களை காரில் பள்­ளிக்கு அனுப்­பலாம் எனக் கூறினேன்.

ஆனால் உன் அம்மா, ‘நீயும் ரோஹனும் எப்­போதும் போல் ஆட்­டோவில் மற்ற மாண­வர்­க­ளுடன் செல்­லட்டும்’ எனக் கூறினாள். நீ ஆட்­டோவின் ஓட்­டுனர் ‘மாமா’வுடனும் மற்ற குழந்­தை­க­ளு­டனும் நல்ல நட்பு கொண்டு மகிழ்ச்­சி­யோடு சென்றாய். சில நேரத்தில் இப்­படி சின்ன சின்ன விஷ­யம்தான் வாழ்வில் மகிழ்ச்சி.

நீ அடிக்­கடி என்­னிடம், ‘மற்ற குழந்­தைகள் வீட்டில் தொலைக்­காட்சி இருக்­கும்­போது ஏன் நம் வீட்டில் மட்டும் இல்லை?’ எனக் கேட்பாய்.

ஆனால் உன் தாய்,  ‘படிப்­ப­தற்கும், விளை­யா­டு­வ­தற்கும், நண்­பர்­களைச் சந்­திப்­ப­தற்கும் நேரம் இருக்­காது’ எனக் கூறி தொலைக்­காட்சி வாங்க வேண்டாம் எனக் கூறி­விட்டாள்.

அதனால், தினமும் இரவு 8  மணி­யி­லி­ருந்து 10 மணி வரை நம் குடும்­பத்­தோடு சேர்ந்து ஏதா­வது பிர­யோ­ச­ன­மாக செய்ய முடி­வெ­டுத்தோம்.

ஒரு மகள் திரு­ம­ண­மாகி செல்லும் போது, தந்­தையின் மன­நிலை மிகுந்த குழப்­பத்தில் இருக்கும் என்­பது அனை­வரும் அறிந்த ஒன்றே. அவ­ளு­டைய வாழ்வில் எல்­லா­மு­மாக இருந்த அப்­பாவின் இடத்தை,  நம்­பிக்­கை­யு­டைய வேறு ஒரு இளைஞன் பிடிப்பான்.

அவ­னி­டம்தான் இனி அவள்,  அவ­ளது சோகம், மகிழ்ச்சி என அனைத்­தையும் பகிர்ந்து கொள்வாள் என்னும் விஷ­யத்தை அனைத்து அப்­பாகளும் வெறுப்­பார்கள். நீ உன் வாழ்க்கை துணையைக் கண்­டு­விட்டாய் எனக் கூறி­யதும் எனக்கும் சிறிது சோக­மா­கவும், பொறா­மை­யா­க­வும்தான் இருந்­தது.

ஆனால், நான் ரிஷியைச் சந்­தித்­ததும் அவ­னது தோற்­றமும், தைரி­யமும், அனைத்­திற்கும் மேலாக அவன் நேர்­மையும் என்னைக் கவர்ந்த போதுதான்,  ‘நீ ஏன் உன் மனதைப் பறி­கொ­டுத்தாய்?’ எனத் தெரிந்து கொண்டேன். அதன் பிற­குதான் நீ அவ­னுடன் உன் வாழ்க்­கையை வாழ நான் ஒப்புக் கொண்டேன்.

சில மாதங்­க­ளுக்கு முன்பு, என்னை நீ ஒரு தாத்­தா­வாக மாற்றி பெரு­மை­ப்­டுத்­தினாய். ஒரு அப்­பா­வாக உன்னை தூக்­கிய மகிழ்ச்­சியை வார்த்­தை­களால் விளக்க முடி­யாது என்றால், உன்­னு­டைய இல்­ல­மான சாண்டா மோனி­காவில் உன் அழ­கிய மகள் கிரிஷ்ணாவைத் தூக்­கிய அனு­பவம் முற்­றிலும் மாறு­பட்­டது.

நான் இனி ஒரு ஞான­முள்ள வய­தா­ன­வ­னாக நடந்­து­கொள்ள வேண்­டுமோ என ஆச்­சர்­யப்­பட்டேன்! இனி ஒரு அழ­கிய குட்டிச் செல்­லத்தை வளர்க்கும் இன்­பத்தை நான் அனு­ப­விப்பேன்.

உன் திருப்தியான வாழ்வில்,  உன் இலட்சியத்தை நோக்கி நீ சென்று கொண்டு இருக்கையில், ஒன்றை மட்டும் நினைவில் கொள். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு கிரகத்தில்தான் அதுவும் இப்போது ஆபத்தில் உள்ளது.

நன்றாக ஞாபகம் வைத்துக்கொள். நாங்கள் எப்படி, நீ வாழ ஒரு நல்ல இடமாக பூமியைத் தந்தோமோ அதேபோல் கிருஷ்ணாவிடம் இப்பூமியை ஒப்படைப்பது உன் கடமை!பத்திரம் அன்பு மகளே! என எழு­தி­யி­யுள்ளார்.