இன்றிரவு முதல் நீர்வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பத்தரமுல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று(28) இரவு 9.00 மணி முதல் 12 மணித்தியாலத்திற்கு நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக, பத்தரமுல்லை, பெலவத்தை மற்றும் அகுரேகொட ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.