இன்றிலிருந்து காலநிலையில் மாற்றம்…

இன்றிலிருந்து (குறிப்பாக 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில்) நாட்டில், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.