இன்றும் நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் எதிர்வுகூறல்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளில் இன்றும்(19) காலை வேளையில் பனிமூட்டமான காலநிலை எதிர்ப்பாக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில பிரதேசங்களில் 75 தொடக்கம் 100 mmகும் இடையில் மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இடியுடன் கூடிய மழையுடன் கடும் காற்று மற்றும் மின்னல் ஏற்பட கூடும் என்பதால் அது தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.