இன்றும் நாளையும் மழையுடனான காலநிலை…

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் மழையுடனான வானிலையும் காற்றின் வேகமும் இன்றும் நாளையும் குறிப்பிட்ட மட்டத்திற்கு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் குருநாகல் மாவட்டத்தில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில், குறிப்பாக நாட்டின் மேல், தென் மற்றும் தென்கிழக்கு கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது குறிப்பிட்ட மட்டத்துக்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது.

ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது