நாட்டின் பல பகுதிகளில் இன்றும்(13) இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடமத்திய மாகாணம் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் மணிக்கு சுமார் 50 மில்லிமீற்றர் கடும்மழை பெய்யக்கூடும் எனவும் புத்தளத்திலிருந்து கொழும்பு , காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாலான கடற்பிரதேசத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று(13) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலைவேளைகளிலும் மழை பெய்ய கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.