இன்றும் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் சில பகுதிகளில் இன்று(03) மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மட்டக்களப்பு , அம்பாறை , பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இவ்வாறு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தை தவிர்ந்து நாட்டின் ஏனைய மாகாணங்களில் இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் ,சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி , மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், , மழை பெய்யும் போது கடற்பிரதேசங்களில் மணிக்கு 80 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.