இன்றும் பல பிரதேசங்களிலும் மழை…

நாட்டின் இன்றும்(03) மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பிரதேசங்களிலும் மழை பெய்யும் என்று வளிமண்டவியல் திணைக்களம் இன்று(03) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வடமாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை ,அனுராதபுரம்,மொனறாகல பிரதேசங்களில் 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்  என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.