நாட்டைச் சுற்றி வங்காளவிரிகுடாவின் பெரும்பாலான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பிரதேச கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் கடும் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் எனவும் அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யும் என திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.