இன்றும் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை..

மேற்கு, சப்கரமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில பகுதியில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை பெய்யக் கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தென் மாகாணத்தில் குறிப்பாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மணிக்கு சுமார் 50Km வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும்.

மாலை அல்லது இரவு வேளையில் கிழக்கு கடற்கரையோரத்தின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையில் போது பலமான காற்று தற்காலிகமாக வீசக்கூடும். பொதுமக்கள் மின்னர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

(rizmira)