இன்றும் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை..

இன்றும்(04) பல மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் காலி மாவட்டத்திலும் 75 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என அந்நிலையத்தின் வானிலை ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.