மேல், சபரகமுவ, மத்திய வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் இன்று(28) கடும் மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, தென்மேற்கு பகுதிகளில் மழை வீழ்ச்சி குறைவடைய கூடும் என அத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை மற்றும் ஹம்பாந்தொடை தொடக்கம் பொத்துவில் ஊடாக கல்முனை வரை உள்ள கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 – 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.