இன்றும் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

குறிப்பாக மத்திய ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் (குறிப்பாக வடமத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில்) சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி. எதிர்பார்க்கப்படுகின்றது