நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை படிப்படையாக குறையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, மேல், தென், சப்பரகமுவ வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
மன்னாரில் இருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் 60 முதல் 70 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதோடு, கடல் கொந்தளிப்பாக காணப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.