மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதுடன் வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, மத்திய, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மற்றும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.