இன்றும் மழையுடன் கூடிய காலநிலை….

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும், மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.