நாட்டின் மேற்கு, வட மேற்கு, ஊவா, சபரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், வவுனியா மாவட்டத்தின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் நிலவி வரும் காலநிலையில் நாளை(25) முதல் சிறிது மாற்றம் ஏற்படும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக் கொள்ளுமாறு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்க்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.