தமிழ் – சிங்கள பண்டிகைக் காலத்தையொட்டி இன்றும் (16) இலங்கை போக்குவரத்து சபை மேலதிக பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதுடன் விசேட ரயில் சேவைகளையும் முன்னெடுத்துள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு பெரும்பாலானோர் கொழும்பில் இருந்து தூர இடங்களுக்கு செல்வதற்கும் பின்னர் மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்கும் இந்த மேலதிக பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் குறித்த இந்த பேரூந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்தின் சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன மேலும் தெரிவித்திருந்தார்.
#####