இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் உயிரிழப்பு….

சிலாபம் – வென்னப்புவ, நயினமடம பாலத்திற்கருகில் இன்று(20) அதிகாலை 3.20 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரொன்றும் லொறியொன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான காரில் பயணித்த 6 ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வென்னப்புவ பகுதியை சேர்ந்தவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.