இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) – கிளிநொச்சி, பச்சிளைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று(04) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மரக்கறிகள் ஏற்றி யாழ் நோக்கி பயணித்த லொறி ஒன்றும் எதிர் திசையில் வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்தில் சம்பவ இடத்திலேயே லொறி சாரதியும் டிப்பர் வாகன சாரதியும் உயிரிழந்துள்ளனர்.

32 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், லொறியின் சாரதி மதுபோதையில் இருந்ததாக பளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.