பதுளை – பசரை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று(14) அதிகாலை ஏற்பட்ட தீ காரணமாக மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண்கள் மூவரும் வர்த்தக நிலையத்தில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வியாபார நிலைய உரிமையாளரின் மகள், மனைவி மற்றும் தாய் ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.