இன்று அதிகாலை மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது…

சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது அவர்களிடம் இருந்து தடைசெய்யப்பட்ட வலைகள் 04 , டிங்கி இயந்திரம், கெனொய் இயந்திரம் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அம்பலன்கொட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.