இன்று அப்துல் கலாம் இலங்கை வருகிறார்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார்.

மின்வலு எரிசக்தி அமைச்சரின் அழைப்பின் பேரிலேயே இலங்கை வரும் இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

மேலும்,இலங்கையில் நடைபெறும் அணுசக்தி மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கை வரும் அப்துல் கலாம், எதிர்வரும் 27 ஆம் திகதி இந்தியா திரும்பவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலொன்னே தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் எதிர்கால தலைவர்கள்” என்ற தலைப்பில் நாளை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் அப்துல் கலாம், சுமார் 1500 மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.