இன்று ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை(25) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

சகல தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் காணாமல்போன சகலரையும் கண்டுபிடிக்குமாறு கோரியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இப்போராட்டம் சமஉரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது இதில் காணாமல் போனோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.