இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயம்…

கண்டி – மகியங்கனை பிரதான வீதியின் ஹசலக பிரதேசத்தில் இன்று(20) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் பேரூந்தொன்றும் டிபர் ரக வாகனமொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஹசலக மற்றும் மகியங்கனை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.