அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று(06) காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
களனி, பேலியகொடை, வத்தளை, மஹர, தொம்பே, ஜா-எல, சீதுவ மற்றும் கம்பஹா நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.