இன்று உதயநிதிக்காக இதை செய்யும் ஏ.ஆர்.ரஹ்மான்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தின் முதல் பாடலை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட இருக்கிறார்.

மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நிமிர்’.

பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சண்முகராஜ் உட்பட பலரும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த படம் எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக படத்தின் பாடல்கள், டிரைலர் விரைவில் வெளியாக இருக்கிறது.

`மகேஷிண்ட பிரதிகாரம்’ என்ற மலையாள படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கும் இந்த படத்தில் உதயநிதி ஒரு போட்டோகிராபராக நடித்திருக்கிறார். தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து “நெஞ்சில் மாமழை” என்ற ஒரு சிங்கிள் டிராக்கை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று(19) வெளியிடுகிறார்.