இன்று எட்டு மணித்தியால நீர் வெட்டு அமுலில்..

கண்டியின் சில பகுதிகளில் இன்று(10) எட்டு மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கண்டி மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், ஹரிஸ்பதுவ, மடவல, புவக்பிடிய மற்றும் அகுரண ஆகிய பிரதேசங்களிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி குறித்த பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.