இன்று கண்களை தானம் செய்கிறார் கம்மன்பில…?

நாடாளுமன்ற உறுப்பினரும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில, கண்களை தானம் செய்ய உள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.

கண்கள்ளை தானம் செய்யும் பத்திரத்தை அவர், கண் நன்கொடை சங்கத்துக்கு, இன்று(11) காலை 10 மணியளவில் கையளிக்கவுள்ளார் என அக்கட்சி மேலும் தெரிவித்திருந்தது.

மேலும், பிவித்துரு ஹெல உறுமயவின் ஏனைய உறுப்பினர்களும் கண்களை தானம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள், கண்களை தானம் செய்யும் பத்திரத்தை, கண் நன்கொடை சங்கத்துக்கு, இன்று கையளிக்கவுள்ளனர்.

 

(riz_mira)