பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மொனரதொன்ன பகுதியில் இன்று(28) காலை இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுவன்வில பகுதியில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கொள்கலன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.