இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தாயும் குழந்தையும் உயிரிழப்பு…

குருநாகல் – கண்டி பிரதான வீதியின் நுகவெல பிரதேசத்தில் இன்று(14) காலை இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் குழந்தை உயிரிழந்துள்ளதுடன் தந்தை காயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த மூன்று பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தாயும், குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

அம்பத்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் தாய் ஒருவரும், இரண்டு வருடங்களும் 03 மாதங்களான பெண் குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.