இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் வைத்தியசாலையில்…

தம்புள்ளை – அனுராதபுரம் பிரதான வீதியில் புலாகல பிரேதேசத்தில் இன்று (17) காலை வேன் ஒன்று வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த மின்மாற்றியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் வானில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் படுகாயடைந்து, தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு படுகாயடைந்தவர்கள் வெலிமட, பொரலன்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சாரதியால் வேனின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் படுகாயடைந்த 12 பேரில் 8 பெண்கள் 4 ஆண்கள் உட்பட சிறுவர்கள் இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.