இன்று காலை கொழும்பினை அண்டிய பகுதிகளில் சிறப்பு போக்குவரத்து ஒழுங்கு..

அவுஸ்திரேலிய பிரதமரின் வருகை காரணமாக கொழும்பினை அண்டிய பகுதிகளில் சிறப்பு போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, களனி பாலம் முதல் பேஸ்லைன் வீதி, பொரளை – டி.எஸ் சந்தி வரை மற்றும் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, ஷாந்த மைகல் பாதை, கொள்ளுப்பிட்டி சந்தி முதல் காலி முகத்திடல் வரையிலான வீதிகளிகளின் போக்குவரத்து, இன்று(02) காலை 7.15 தொடக்கும் 7.45 வரையில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

அதனை தொடர்ந்து மீண்டும் 9.15 முதல் 9.45 வரையில் குறித்த வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்