கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று(09) அதிகாலை முதல் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாகவே இவ்வாறு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிகப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.