ஜெனீவா பிரேரணை தொடர்பில் இலங்கை அரசாங்கம் செயற்பட கூடிய முறை குறித்து கட்சி தலைவர்களின் கருத்துக்களை ஆராய்வதற்காக அனைத்துக் கட்சி சந்திப்பு இன்று(22) இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாலை 05 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த அனைத்துக் கட்சி அரசியல் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் உட்பட 21 அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஒரு கட்சியில், கட்சியின் பொது செயலாளர் உட்பட மூவருக்கு இந்த அனைத்துக் கட்சி சந்திப்பில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணகே, ஜனநாயக கட்சி தலைவர் சரத் பொன்சேகா, பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில, தொழிலாளர் தேசிய முன்னணி தலைவர் பீ.திகாம்பரம் ஆகியோரும் அனைத்து கட்சி சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.