இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல்..

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (3) நடைபெறவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்​போது, கிடைக்கப்பெற்று வரும் தேர்தல் முறைபாடுகள் குறித்து சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயப்பூர்வமாகவும் நடத்துவது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்தும் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#reeshma