இன்று தொடக்கம் காலநிலையில் மாற்றம்…

இன்று தொடக்கம் எதிர்வரும் 15ம் திகதி வரை இலங்கைக்கு மேலாக சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை , நாட்டின் தென் , மேல் , சப்ரகமுவ , ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் சுமார் 100 மில்லி மீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே , கடும் மழை காரணமாக ஏற்படக்கூடும் அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்ளும் முகமாக அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.