எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இன்று காலை 08.30 முதல் அனைத்து மாவட்ட செயலகங்களிலும் வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கடந்த திங்கட்கிழமை வேட்புமனு ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது, இதன்படி கடந்த வௌ்ளிக்கிழமை வரை அங்கீகரிக்கப்பட்ட 47 கட்சிகள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.
மேலும் 111 சுயாதீனக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
எனினும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனு ஏற்கும் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆகியன இன்று தமது வேட்பு மனுக்களை கையளிக்கவுள்ளன.
அத்துடன் வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் போது வாகனப் பேரணி மற்றும் பேரணியாக வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டத்தை மீறுவோருக்கு எதிராக பாராபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் செயலகம் மேலும் கூறியுள்ளது.
(riz)