இன்று நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று(08) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊதியம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்திற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தும், அதற்கான அனுமதியை வழங்குமாறும் குறித்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன

இந்நிலையில், குறித்த கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உரிய முறையில் தீர்வு ஒன்று வழங்கப்படாத நிலையில் இந்த பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் , பாதுகாப்பாளர்கள் சங்கம் , சாரதிகள் சங்கம் மற்றும் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் ஆகிய 4 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளன.

மேலும் இந்த விடயம் குறித்து இன்று(08) புகையிரத ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அஷோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.