பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று(20) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்காததையடுத்தே குறித்த போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக இந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று நள்ளிரவு முதல் ரயில்வே சாரதிகள், பாதுகாவலர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.