தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை தீவிரம் பெறுவதால் நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் சில தினங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்று மத்திய , சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என கோரப்பட்டுள்ளது.