இன்று பல மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை…

நாட்டின் பல பகுதிகளில் இன்று(07) பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென், சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மாகாணங்களுடன், மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் 100mm இற்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக் கூடும் என குறித்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் மட்டக்களப்பிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக காலி – மாத்தறை ஊடாக கொழும்பு வரையான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 – 80 Km வரை அதிகரித்து வீசக் கூடும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடற்படையும் அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கோரியுள்ளது.